செய்திகள்


துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து முதல்வர் பழனிசாமியை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சந்தித்து பேசி வருகிறார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இருவருடனும் அடுத்தடுத்து சந்தித்து பேசி வருகிறார்.


சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா இருந்த வரை இந்த கேள்வி எழ வாய்ப்பு இல்லை. இப்போது இபிஎஸ், ஓபிஎஸ் என்ற இரட்டை தலைமை கட்சியில் இருப்பதால் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல்வர் வேட்பாளர் பற்றிய பேச்சு எழுந்ததில் இருந்தே அதிமுகவில் சலசலப்பு ஆரம்பமாகி விட்டது. அதிமுகவில் முக்கிய தலைவர்கள் அனைவருமே 7ஆம் முதல்வர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளனர்.


பிரதமர் மோடி குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பிய காவலர் இடமாற்றம் செய்யப்பட்டார். சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய காவலர் மெல்வின், கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.



சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 9வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல், 84.14 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலையும் இன்றுமாற்றம் செய்யப்படாமல் 76.10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.



 


உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10.11 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 10,11,887 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 33,829,018 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 25,129,901 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 65,591 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.