உடுமலை சங்கர் கொலை மேல்முறையீடு - வழக்கு உச்ச நீதிமன்றம் கருத்து

 உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பை எதிர்த்து கௌசல்யா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது.

தனது மகள் கௌசல்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட உடுமலை சங்கரை கூலிப்படையை ஏவி படு கொலை செய்த வழக்கில் சின்னச்சாமி உள்பட 6 பேருக்கு திருப்பூர் நீதிமன்றம் தூக்குத் தண்டணை விதித்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கவுசல்யாவின் தந்தையை விடுதலை செய்து உத்தரவிட்டது. மற்ற 5 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டணையாகவும் குறைக்கப்பட்டது.


இதனை எதிர்த்து கௌசல்யா உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். சங்கரின் சகோதரர் விக்னேஸ்வரன் மற்றும் தமிழக அரசு சார்பாகவும் மேல்முறையீடு செய்யப்பட்டது.