எம்ஜிஆரின் அண்ணன் .மகன் எம்சி சந்திரன் ... கொரோனாவுக்கு உயிரிழப்பு


எம்ஜிஆரின் அண்ணன் சக்கரபாணியின் மகன் எம்சி சந்திரன் கொரோனாவுக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.


எம்ஜிஆரின் அண்ணன் சக்கரபாணி. இவரது மகன் எம்சி சந்திரசேகர் என்ற சந்திரன். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இன்று காலை திடீரென்று உடல் நிலை மோசமடைந்துள்ளது. உடனே, வென்ட்டிலேட்டர் பொருத்த ஏற்பாடு செய்வதற்குள் உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேச்சையாக போட்டியிடுவதற்கு 2017ல் வேட்பு மனுத் தாக்கல் செய்தவர் சந்திரன். இவருக்கு ஆதரவு தர வேண்டும் என்று அதிமுகவினரை கேட்டுக் கொண்டு இருந்தார்.


ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இவரது அண்ணன் மகள் தீபா கட்சி தொடங்குவதாக அறிவித்து இருந்தார். இந்த நிலையில் இவருக்குப் போட்டியாக, சந்திரன், அரசியல் கட்சியை தொடங்கினார்.


அதற்கு அண்ணா எம்.ஜி.ஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் வைத்து இருந்தார். கட்சிக் கொடி மற்றும் தொழிற்சங்க கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார். சிகப்பு நிறத்தில் அமைந்த கொடியில், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்கள் இடம் பெற்று இருந்தன. அதற்குப் பின்னர் பெரிய அளவில் அரசியலில் ஈடுபடவில்லை.