நியாய விலைக் கடை- பதிவாளர் சுற்றறிக்கை

 தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


பொருள் விற்பனை முனை எந்திரத்தையும், உண்மை இருப்பையும் சரிபார்க்கும்போது கூடுதல் இருப்பு காணப்பட்டால், குடும்ப அட்டைதாரருக்கு தெரியாமல் கடைப் பணியாளர் போலி பட்டியல் தயாரித்ததாகவும், பொருள் வினியோகம் செய்யும்போது எடை குறைத்து கொடுத்ததாகவும் தான் கருத வேண்டும்.


உணவு பாதுகாப்புக்காக அதிக மானியத்துடன் வழங்கும் அத்தியாவசிய பொருட் களை உரிய முறையில் பயனாளிகளுக்கு வழங்காததும், எடை குறைத்து விற்பது அல்லது போலிப் பட்டியல் வாயிலாக பொருட்களை திருடுவதும் தீவிர முறைகேடுகளாகும்.


இதனால்தான் நியாய விலைக் கடைகளில் பொருட்கள் கூடுதல் இருப்பு நேர்கிறது. எனவே, போலிப்பட்டியல் மூலம் அத்தியாவசிய பொருட்கள் திருடப்படும் குற்றம் போலவே இந்த செயலும் கருதப்பட்டு அபராதத் தொகையை தொடர்ந்து வசூலிக்க உத்தரவிடப்படுகிறது.