இந்தி தெரியாததால் அவமானப்பட்ட பிரபல இயக்குனர்


 


தற்போது தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் இந்தி எதிர்ப்பு வாசகங்களுடன் கூடிய டீசர்ட்களை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.


அந்த வகையில் சமீபத்தில் கூட 'I am a தமிழ் பேசும் Indian' மற்றும் 'இந்தி தெரியாது போடா' ஆகிய வாசகங்களுடன் கூடிய டீசர்ட்களை யுவன் ஷங்கர் ராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட பலர் அணிந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது.


இந்த நிலையில் தற்போது இந்தி திணிப்பை எதிர்த்து நகைச்சுவை நடிகரான கருணாகரன் மற்றும் பிரபல இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் அவரது மகன் ஆகியோர் 'Iam a தமிழ் பேசும் Indian' என்ற வாசகத்துடன் கூடிய டீசர்ட்களை அணிந்துள்ளனர்.


எம்பி கனிமொழி அவர்களுக்கு நடந்ததை போன்று வெற்றிமாறன் அவர்களுக்கும் டெல்லி விமான நிலையத்தில் நடந்ததாக சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்களது இந்த டீசர்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.