டெல்லியில் குறைந்த அளவில் பதிவான மழை

 டெல்லியில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குறைந்த அளவில் இந்த மாதம் பதிவான மழை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


டெல்லியில் செப்டம்பர் மாதத்தில் 21 மி.மீ க்கும் குறைவாக மழை  பதிவாகியுள்ளது. இது 16 ஆண்டுகளில் மிகக் குறைவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்த மாதத்தில் வெறும் 20.9 மிமீ மழையை மட்டுமே பதிவு செய்துள்ளதாக ஐஎம்டி தரவு தெரிவிக்கிறது. மேலும், டெல்லியில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 237 மி.மீ மழை பெய்தது, அது ஏழு ஆண்டுகளில் மிக உயர்வு.