புரட்டாசி மாதம் சிறப்பு


திருப்பதி வெங்கடாசலபதி என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது “புரட்டாசி” மாதத்தில் விரதமிருந்து அவரை வழிபடுவது தான்.


புரட்டாசி மாதம் பிறக்கப்போகிறது என்று தெரிந்தாலே  ஏராளமானோர் அசைவ உணவுகளை தவிர்த்து விட்டு சைவ உணவுகளுக்கு மாறி விடுவார்கள்.


குரு வாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் புரட்டாசி மாதப் பிறப்புடன் அற்புதமான அமாவாசையும் இணைந்து வந்தது மிகச்சிறந்த இந்த நல்ல நாளில் விரதத்துடன் தொடங்கலாம்.


புரட்டாசி மாத தட்ப வெப்ப நிலை என்பது, அக்னி நட்சத்திர வெயில் காலமான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான பருவத்தில் நிலவும் வெப்பத்தை காட்டிலும் அதிக கேடு விளைவுக்கும், அந்த வெப்பம் நம்முடைய உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது.


இந்த சமயத்தில் அசைவ உணவுகளை சாப்பிட்டால் மேலும் கூடுதல் சூட்டை கிளப்பி வயிறு சம்பந்தமான உபாதைகளை ஏற்படுத்தி, நம்முடைய உடல் நலத்தை கெடுக்கும் என்று அறிவுறுத்தியிருக்கின்றனர்.


புரட்டாசி மாதம் அநேகம் பேர் சைவத்திற்கு மாறி விடுவதால் . காய்கறிகளின் விலையும் உச்சத்திற்கு சென்று விடும். 

மேலும் இந்த புரட்டாசி மாதத்தில், சூரியன் “கன்னி” ராசியில் பெயர்ச்சியாகி தென் திசையை நோக்கிய தனது பயணத்தை தொடங்கும் மாதமாக இருக்கிறது.



வழிபடும் பக்தர்கள் அனைவரின் விருப்பங்களை நிறைவேற்றுபவராக இருக்கும் பெருமாளை வழிபடும் தெய்வீகமான புரட்டாசி மாதத்தில் “கிரகபிரவேசம்” அல்லது “புதுமனை புகுவிழா”, வேறு புது வீட்டில் வசிக்க மாறி செல்லுதல் போன்ற சுப காரியங்கள் செய்யபடுவதில்லை. அதற்கான காரணங்கள் என்ன என்பதை பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.


தென் திசை என்பது “எம தர்மன்” இருக்கும் திசையாகும். மறைந்த நம் முன்னோர்களை வழிபடுவதற்குரிய திசை. இப்புரட்டாசி மாதத்தில் தான் பித்ருக்களை வழிபடுவதற்கு சிறந்த தினமான “மகாளய அமாவாசை” தினமும் வருகிறது.


மோட்ச பதவியை அளிக்கும் நாராயணனை விரதமிருந்து வழிபடுவதற்கும், மறைந்த நமது முன்னோர்களை வழிபடுவதற்கும் சிறந்த மாதமாக புரட்டாசி மாதம் இருப்பதால் “கிரகப்பிரவேசம்” எனப்படும் புதுமனை புகுதல், வசிக்கின்ற வாடகை வீட்டிலிருந்து வேறு வீட்டிற்கு மாறி சென்று சென்று குடிபுகும் போது செய்யபடும் “பால் காய்ச்சுதல்” போன்ற சுப நிகழ்ச்சிகள் செய்யாமல் தவிர்க்கின்றனர்.


இது காலப்போக்கில் ஒரு சம்பிரதாயமாக கருதப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது.