சீன பொருட்களை இறக்குமதி செய்ய தடை


கொரோனாவிற்கு பிறகு அமெரிக்க-சீனா உறவுகள் மோசமடைந்துள்ளன. ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீனா தான் உலகெங்கிலும் கொரோனா நோய் பரவ அனுமதித்ததாக குற்றம் சாட்டினார்.


மேலும், சின்ஜியாங் மாகாணத்தில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், ஹாங்காங்கின் சுயாட்சி, மற்றும் தொழில்நுட்ப திருட்டு ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்க-சீனா உறவுகள் மேலும் மோசமடைந்துள்ளன.


இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில்,  சின்ஜியாங் மாகாணத்தில்  கட்டாய தொழிலாளர்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பருத்தி, ஆடை, கணினி பாகங்கள் உள்ளிட்ட 5 சீன பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு  தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த பொருட்களை சீன அரசாங்கம் உய்கூர் சிறுவர்கள், பெண்கள் உள்பட சிறுபான்மை மக்களை கட்டாய தொழிலாளர்களாக பயன்படுத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.