நடிக்க வருவாரா ரோஜா மகள்

 தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர் ரோஜா. தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.


ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏ-வாக இருக்கும் ரோஜா ஆந்திரப் பிரதேச தொழில் துறை உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராகவும் இருக்கிறார்.


சில தினங்களுக்கு முன்பு ரோஜா, செல்வமணி தம்பதியினரின் மகள் அன்ஷுமாலிகா 17வது பிறந்தநாளைக் கொண்டாடிய புகைப்படங்களை ரோஜா அவருடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.


அந்தப் புகைப்படங்களைப் பார்த்த பலரும், மிக அழகாக இருக்கும் அன்ஷுமாலிகா சினிமாவில் நடிக்க வருவாரா எனக் கேட்க ஆரம்பித்து விட்டனர்.


சினிமாவில் வாரிசு நடிகர்கள், நடிகைகள் வருவது வழக்கம் தான். அதுவும் தெலுங்குத் திரையுலகத்தில் அது அதிகமாகவே இருக்கிறது.


தங்கள் மகளை நடிக்க அவர்கள் அனுமதித்தால் உடனடியாக பெரிய இயக்குனர்களும், பெரிய ஹீரோக்களும் அவர்கள் படங்களில் நடிக்க வைக்க போட்டி போடுவார்கள் என்கிறது டோலிவுட் வட்டாரம்.