தமிழக ஆளுநருடன். முதல்வர் மாலை சந்திப்பு

 தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


தேசியக் கல்வி கொள்கை குறித்து ஆலோசிக்க நேற்று ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் ஆளுநர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது.


இதில், பிரதமர் மோடியும் கலந்து கொண்டு புதிய தேசியக் கல்வி கொள்கை குறித்து பேசினார். இந்த நிலையில் இன்று ஆளுநரை முதல்வர் எடப்பாடி சந்திக்க இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

மேலும் சட்டசபைக் கூட்டம் வரும் 14ஆம் தேதி கூடுகிறது. மூன்று நாட்கள் மட்டுமே கூட்டம் நடத்துவதற்கு அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்பு நான்கு நாட்கள் நடைபெறும் என்று கூறப்பட்டு இருந்தது.


கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மூன்று நாட்கள் மட்டுமே நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.