அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அண்ணாமலையார் தரிசனம்

 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தென்னிந்தியாவில் புகழ்பெற்றது. உலகம் முழுவதும் இருந்து இக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர்.


இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா காரணமாக பொதுமுடக்கத்துக்கு முன்பே மத்திய அரசு அமல்படுத்திய மதவழிபாட்டு தலங்கள் மூடல் உத்தரவை தொடர்ந்து அண்ணாமலையார் கோவில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டது. ஆகமவிதிப்படியான பூசைகள் மட்டும் தொடர்ச்சியாக நடந்து வந்தன.


இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் அடையாள அட்டையை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் உத்தரவிட்டுள்ளார்.


அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, வங்கி பாஸ் புத்தகம் இதில் ஏதாவது ஒரு அடையாள அட்டையை கொண்டு வந்தால் மட்டுமே பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


அதே போல், கோயிலுக்கு தரிசனம் கூட்டமாக வருவதை தவிர்க்கும் பொருட்டு கிழக்கு ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டு,மேற்கு கோபுரம் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.