28-ம் தேதி பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும்


இந்த கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர ஒரு லட்சத்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருந்தனர். கடந்த மாதம் 27-ம் தேதி ரேண்டம் எண் வெளியானது.


கடந்த 17-ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மாணவர்கள்  சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அவகாசம் கேட்ட நிலையில் தரவரிசை பட்டியல் நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால், வெளியாகவில்லை  இந்நிலையில், பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் திங்கட்கிழமை வெளியாக  வாய்ப்புள்ளது.