புதிய கல்வி கொள்கை தொடர்பாக 24.09.2020 கருத்து கேட்பு

 



நாடு முழுவதும் புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய கல்வி கொள்கை தொடர்பாக, மாணவர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்களிடம், நிபுணர் குழு 24.09.2020 கருத்து கேட்கிறது.


மத்திய அரசு நாடு முழுவதும்  புதிய தேசிய கல்வி கொள்கை தயாரித்து அமல்படுத்த உள்ளது. தமிழகத்தில், இதை அமல்படுத்துவது குறித்து, அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்களிடம், பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.


இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்க, உயர் கல்வி மற்றும் பள்ளி கல்வி துறை சார்பில், தனித்தனியே நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


உயர் கல்வி நிபுணர் குழுவினர், ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பல்கலை துணை வேந்தர்களிடம், நேற்று முன்தினம் கருத்துக்கள் கேட்டனர். உயர் கல்வித்துறை முதன்மை செயலர் அபூர்வா தலைமையில், இணையம்  வழியில், இந்த கூட்டம் நடந்தது.


இதையடுத்து, இன்று ( 24.09.2020 )மாணவர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்களிடம், நிபுணர் குழு கருத்து கேட்கிறது. காலை, 9:30 மணி முதல், மூன்று குழுவாக, இணைய வழியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.