காவலர் பணியிடங்களுக்கு டிசம்பர் 13ல் எழுத்துத்தேர்வு


தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


10,906 பணியிடங்களுக்கு டிசம்பர் 13ல் எழுத்துத்தேர்வு நடக்கும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுகுழுமம் தெரிவித்துள்ளது. 37 மாவட்டங்களில் உள்ள மையங்களில் 1 மணி 20 நிமிடங்கள் எழுத்துத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆயுதப்படை 2ம் நிலை காவலர் பதவிக்கு 3,099 பெண்கள், திருநங்கைகள் உள்பட 3,784 பேர் தேர்வு செய்யப்படுவர்.


தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் 2ம் நிலை காவலர் பதவிக்கு 6,545 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். சிறைத்துறையில் 2ம் நிலை காவலர் பதவிக்கு 119 பேர் தேர்வாக உள்ளனர்.


தீயணைப்பு துறையில் தீயணைப்பாளர் பணியிடத்துக்கு 458 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.