நாடு முழுவதும் இந்திய தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம்.
தமிழகத்தில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது.
ஆனால், கொரோனா ஊரடங்கால் சுங்கச்சாவடிகள் மூடப்பட்டிருந்த நிலையிலும், இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 21 சுங்கச்சாவடிகளில் 01.09.2020 முதல் கட்டணத்தை உயர்த்தி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் சூழ்நிலையில், இந்த கட்டண உயர்வு பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் என கூறப்படுகிறது.
மேலும் BJP மத்திய அரசின் நடவடிக்கைக்கு வாகன உரிமையாளர்களும், ஓட்டுனர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதன்படி சுங்கக்கட்டண உயர்வுக்கு அமலுக்கு வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது
ஆனால், இந்தக் கட்டண உயா்வானது, வழக்கமான நடைமுறையே என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சாா்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.