இ-பாஸ் ரத்து வழக்கில் தமிழக தலைமைச் செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு


இ பாஸ் கட்டாயம் என்பதால் கடந்த சில  மாதங்களாக மக்கள் சிரமப்பட்டதாகவும், உண்மையான காரணங்கள் கூறினால் கூட இ-பாஸ் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.


இந்நிலையில், இ-பாஸ்  அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  இ-பாஸ் ரத்து வழக்கில் தமிழக தலைமைச் செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்து , வழக்கை செப்டம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும், பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வருவதற்கும் இ பாஸ் கட்டாயம் என தமிழக அரசு முன்பு அறிவித்தது.


சமீபத்தில் இ பாஸ் விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் கிடைக்கும் முறையை முதல்வர் அறிவித்து தற்போது அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.