வெஜிடபிள் வெள்ளை குருமா

வெஜிடபிள் வெள்ளை குருமா


ஸ்டார் ஹோட்டலில் கிடைக்கும் வெஜிடபிள் குருமாவை, நம்முடைய வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். ஸ்டார் ஹோட்டல் குருமா அவ்வளவு சுவையாக இருப்பதற்கு ஒரே ஒரு காரணம் தான். அது என்ன டிப்ஸ் என்பதையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.


நமக்கு எல்லோருக்கும் பிடித்த சூப்பர் வெஜிடேபிள் குருமாவை எப்படி வைப்பது பார்த்து விடலாமா?



தேவையானவை:


காய்கறி கலவை – 1 கப் (பீன்ஸ், காரட், காலிப்ளவர், பட்டாணி, உருளை)
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
பட்டை, லவங்கம் – 1/2 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு


அரைக்க:


தேங்காய் – அரை மூடி
பொட்டுக்கடலை – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 5
சோம்பு – 1/4 ஸ்பூன்
முந்திரி பருப்பு – 10
பூண்டு – 8
கசாகசா – 2 ஸ்பூன்


செய்முறை:


முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில், 2 ஸ்பூன் அளவு, கசகசாவை போட்டு, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, 30 நிமிடங்கள் வரை ஊற வைத்துவிடுங்கள்.


ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய்த்துருவல் 2 கைப்பிடி அளவு, முந்திரி-10, ஊறவைத்த கசகசா இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மைய, விழுதாக நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்


ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம், கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு போட்டு வதக்கி தக்காளி சிறிது உப்பு போட்டு வதக்கவும்.


பின்னர் காய்கறிகளை போட்டு நல்லா ஒரு வதக்கு வதக்கி சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.


நல்லா கொதித்து வரும் சமயத்தில் அரைத்த விழுதை போட்டு கொதிக்கவிடவும்.


காய்கறிகள் வெந்த பின் மல்லி இழை தூவி அடுப்பை அணைத்துவிடவும்.


இறுதியாக இறக்குவதற்கு முன்பு, ஒரு டம்ளர் அளவு காய்ச்சிய ஊற்றி குருமா செய்து பாருங்கள். இதன் சுவை உங்களுக்கு ஸ்டார் ஹோட்டல் பக்குவத்தை தரும்.


சுவைமிகுந்த  ஸ்டார் ஹோட்டல் வெஜிடபிள் வெள்ளை குருமா தயார்.


இந்த குருமாவை சப்பாத்தி, ரொட்டி, தோசை, இடியாப்பம், இவைகளுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் சமையல்  பயணம் தொடரும்.


வணக்கம் அன்புடன் கார்த்திகா