புழல் சிறையில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டு


புழல் சிறையில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.


புழல் சிறையில் 50 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டை அமைச்சர்கள் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் திறந்து வைத்தனர். 


புழல் சிறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 114 கைதிகளில் 99 பேர் குணமடைந்துள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


இதனிடையே  74-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் முதல்வர் பழனிசாமி கொடியேற்றிய பின்னர் சிறப்பு விருதுகளை வழங்கினார்.


அப்போது, மருத்துவ சேவை கழகத்திற்கான நல் ஆளுமை விருது அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது.