கெட்டுப்போன ஆளுக்கும் தான் நடவடிக்கை- தயாநிதிமாறன் ட்வீட்


கெட்டுப்போன பாலுக்கு மட்டுமல்ல, கெட்டுப்போன ஆளுக்கும் சேர்த்து தான் நடவடிக்கை. நடிகர் மற்றும் பாஜக நிர்வாகியான எஸ்.வி. சேகர், தேசிய கொடி குறித்து பேசி ஒரு விடியோவை வெளியிட்ட வீடியோ வைரலாகி சர்ச்சைக்குள்ளானது.


எஸ்.வி சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார், தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் உட்பட 2 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இந்நிலையில், இதுகுறித்து தயாநிதிமாறன் தனது ட்வீட்டர்  பக்கத்தில், 'மந்தைவெளியில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் மட்டும் ஏற்பட்ட குலைநடுங்கும் நிலநடுக்கத்தால் 9 பால் பாக்கெட்டுகளும் சிதறிக் கதறுகிறது.


 I respect the national flag. Do you?


கெட்டுப்போன பாலுக்கு மட்டுமல்ல, கெட்டுப்போன ஆளுக்கும் சேர்த்துதான் நடவடிக்கை!' என பதிவிட்டுள்ளார்.