எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் நிலை கவலைக்கிடம் மருத்துவமனை அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழ் திரைப்பட பாடகர் எஸ்.பி. கடந்த வாரம் அவர் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டார்.
அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி சென்னை சூளைமேடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் ஐசியுவிற்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சையில் பெற்று வருகிறார் என்று மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெறறு வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடம்:
மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஆகஸ்ட் 5-ம் தேதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.