கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிழும் வரும் 17 -ம் தேதி முதல் 1,6,9 -ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவித்தார்.
அந்தவகையில் கோவை மாநகராட்சி, அரசு ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் பணியை தொடங்கியது.
அப்பொழுது வழங்கப்பட்ட விண்ணப்பபடிவங்களில் 1- ம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களில் இந்தி மொழி படிக்க விரும்புகிறீர்களா? எனவும், அல்லது அதிகப்படியாக கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே நீடிக்கும் என முதல்வர் தெரிவித்துள்ள நிலையில், இந்தி அடங்கிய மும்மொழிக் கொள்கை ஏற்கப்பட்டதா? எனவும், புதிய கல்விக்கொள்கைகளுக்கான நடைமுறையை தமிழக அரசு தொடங்கிவிடீர்களா? மக்கள் பலரும் கேள்வியெழுப்பினர்.