கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் மட்டும் வெவ்வேறு கட்ட பரிசோதனையில் 3 தடுப்பூசிகள் உள்ளது. அதே போன்று பல நாடுகளில் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளிலும்,சோதனை நிலையிலும் உள்ளது. ஆனால் கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்ததாக ரஷ்யா மட்டும் சமீபத்தில் தெரிவித்திருந்தது.
கொரோனா தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்தால் அவை பணக்காரர்களுக்கு முன்னுரிமை வழங்க கூடாது என்று வாடிகன் தேவாலயத்தின் பொது மக்களிடம் உரையாற்றிய போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்
மேலும் கூறிய அவர், கொரோனாவுக்கான தடுப்பூசி ஒரு நாட்டின் தனிச் சொத்தாக மாறினாலும் அது வருத்தப்பட வேண்டிய விஷயங்களாக இருக்கும் என்றும் போப் பிரான்சிஸ் கூறினார்.
இந்த கொரோனா வைரஸ் ஏழைகளின் கடினமான சூழ்திலையையும், உலகில் ஆட்சி செய்யும் பெரும் சமத்துவமின்மையையும் வெளிப்படுத்தியுள்ளது.
எனவே பணக்காரர் என்றில்லாமல் கொரோனா தடுப்பூசி உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் உள்ளதாக இருக்க வேண்டும் என்று போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.