என்.எல் வெங்கடேசன் மறைவிற்கு கே.எஸ் அழகிரி இரங்கல்


காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ராணி அவர்களின் கணவரும், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தந்தையுமான முன்னாள் தலைமை காவல்துறை அதிகாரியுமான என்.எல் வெங்கடேசன் உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார்.


முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திருமதி ராணி வெங்கடேசன் அவர்களின் கணவரும், முன்னாள் தலைமை காவல்துறை அதிகாரியுமான திரு எல்.என்.வெங்கடேசன் அவர்கள் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.


எல்.என். வெங்கடேசன் அவர்கள் காவல்துறையில் படிப்படியாக பல்வேறு உயர் பொறுப்புகளை பெற்று சிறப்பாக செயல்பட்டவர்.


காவல்துறையினருக்கு முன்மாதிரியாக விளங்கியவர். எல்.என்.வெங்கடேசன் அவர்களை இழந்து வாடும் அவரது துணைவியார் திருமதி ராணி வெங்கடேசன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்  ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.