தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், மக்கள் அனைவரும் வெளியே வரும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜு கொரோனாவில் இருந்து மீண்டு வந்த நிலையில், அவர் முகக்கவசம் அணிவதை தவிர்த்து வருகிற நிலையில், இவரது இந்த செயல் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ, 'நான் கொரோனாவோடு வாழ பழகிவிட்டேன். அது மீதான பயம் எனக்கு கொஞ்சம் கூட இல்லை. அதோடு தமிழகமும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. அதனால் தான் அணிய விரும்பவில்லை.' என தெரிவித்துள்ளார்.