குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து- உயர்நீதிமன்றம் உத்தரவு


தமிழக சட்டப்பேரவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் எடுத்து சென்றனர்.


அதற்கு எதிராக அவர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை, எதிர்த்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உட்பட 21 எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


ஏற்கனவே, விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஸ்டாலின் உள்ளிட்டோர் தலைமையில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், நாட்டில் குட்கா பொருட்கள் எளிதில் கிடைப்பதாகவும், அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு வர மட்டுமே சட்டப்பேரவைக்கு எடுத்து சென்றதாகவும், அதனால் சபாநாயகரை எந்த அவமரியாதையும் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில், உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.


அதில், ' குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் 'ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.