தமிழ் ஆவணி மாத ராசிபலன் ( 5 to 8 )


சிம்மம்


சிம்ம ராசி அன்பர்களே! உங்கள் ராசி நாதன் சூரிய பகவான், உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பதால், உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். இதுவரை உங்களுக்கு எதிராக இருந்த விஷயங்கள் எல்லாம் சாதகமாக மாறும்.


பொருளாதார நிலையில் மாத முற்பகுதியில் செலவினங்கள் இருந்தாலும், மாத பிற்பகுதியில் பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டு.


உங்கள் சொல்லுக்கு மதிப்பு, மரியாதை உயரும். சகோதர, சகோதரர்களால் ஆதாயம் உண்டு என்றாலும் மனஸ்தாபங்கள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. புதிய முயற்சிகளில் கவனம் தேவை.


தாய் மற்றும் உறவுகளால் ஆதாயம் உண்டு. வீடு, வாகனம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும்.

குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. குழந்தைகளுக்கு ஞானம் மிகும்.  சனி  பகவான் 6 ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிரிகள் விலகிச் செல்வார்கள்.வழக்கு விஷயங்கள் அனைத்தும் சாதகமாக முடியும். அரசால் அனுகூலம் உண்டு.


செவ்வாய் ஆட்சி பலம் பெற்றிருப்பதால் தந்தையால் அனுகூலம் உண்டு. பிதுர் வழி சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும்.


மூத்தோர்களின் அறிவுரையும், ஆசியும் கிடைக்கும். நீண்ட நாளாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். முக்கிய பிரமுகர்களின் நட்பும், அறிவுரையும் கிடைக்கும்.


தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உயரதிகாரிகளின் ஆதரவும், முக்கிய அறிவுரையும் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். முயற்சிகள் திருவினையாகும்.


சந்திராஷ்டம நாட்கள்:செப்டம்பர் 3, 4, 5

பரிகாரம்: ஸ்ரீ குருராகவேந்திரரை ஞாயிற்றுக்கிழமையில் பூஜை செய்து வழிபடுவது நன்மை தரும்.


கன்னி:


கன்னி ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் புதன் உங்கள் ராசிக்கு 11 ல் சஞ்சரிப்பதால் எந்த சூழ்நிலையையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் லட்சியத்தை நோக்கிய பயணம் சாதகமாக அமையும். 


பொறுமை அவசியம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.


இதுவரை இருந்த இறுக்கம் மாறும். நீண்ட நாளாக வர வேண்டிய பணம் கை வந்து சேரும்.  புதிய மாற்றங்கள் ஏற்படும். சகோதர வகையில் நன்மை இருந்தாலும் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். முயற்சிகளில் தடை ஏற்பட்டு நீங்கும்.

தாய் உடல்நிலையில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவுகளுடன் சிறு மனஸ்தாபங்கள் வர வாய்ப்புள்ளதால் எதிலும் பொறுமையுடன் செயல்படவும்.


வீடு, வாகன பழுது ஏற்பட்டு சரி செய்வீர்கள். வாகன பயணங்களில் கவனம் தேவை. வாகனம் தொடர்பான ஆவணங்களை சரியாக வைத்து கொள்ளுங்கள். 


குழந்தைகள் உடல்நிலையில் கவனம் தேவை. குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து வழி நடத்தி செல்வது.


எதிரிகள் விலகி செல்வார்கள். கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் இருந்தாலும் அதிக உரிமை எடுத்து கொள்ள வேண்டாம். எதிர்பாராத அதிர்ஷ்டமும், தன லாபமும் உண்டு. தொழில் மற்றும் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும்.

சந்திராஷ்டம நாட்கள்:செப்டம்பர் 6,7,8.

பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயரை புதன்கிழமையில் பூஜை செய்து வழிபடுவது நன்மை தரும்.


துலாம்:


துலா ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சுக்கிர பகவான் உங்கள் ராசிக்கு 9 ல் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த தடைகள், பிரச்சினைகள் விலகும். மன அழுத்தம் குறையும்.


உங்கள் சிந்தனை தெளிவாகும். இருப்பினும் சுக், ராகு இணைவதால் சில நேரங்களில் இனம் புரியாத கவலை, கோபம் வந்து நீங்கும். எதிர் பாலினத்தவரால் பிரச்சினை வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.


குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பொருளாதார நிலையில் இருந்த முடக்கம் நீங்கி பணவரவு அதிகரிக்கும். நீண்ட நாளாக வர வேண்டிய பணம் கை வந்து சேரும். 


தாய் உடல் நிலையில் கவனம் தேவை. தாயுடன் மனகசப்புகள் வந்து நீங்கும். வீடு, வாகனம் தொடர்பான விஷயங்களால் ஆதாயம் உண்டு. இருப்பினும் புதிய நிலம், வீடு வாங்கும் போது ஆவணம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.


குழந்தைகளால் நன்மை விளையும். குழந்தைகள் உடல் நிலையில் அதிக அக்கறை எடுத்து கொள்ளுங்கள்.


வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. கூட்டாளிகளால் ஆதாயம் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்களால் நல்ல லாபம் உண்டு.தந்தை வழியில் இருந்த மன கசப்புகள் குறையும்.


தந்தை உடல் நிலை பாதிப்படையும் என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் உத்தியோகத்தில்  உயர்வு ஏற்படும். புகழ், கௌரவம், அந்தஸது உயரும். உயரதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். செலவீனங்கள் அதிகரிக்கும் என்பதால் சிக்கனம் தேவை.

சந்திராஷ்டம நாட்கள்:செப்டம்பர் 8,9,10

பரிகாரம்: ஸ்ரீ விநாயகப்பெருமானை வெள்ளிக்கிழமையில் பூஜை செய்து வழிபடுவது நன்மை தரும்.


விருச்சிகம்:


விருச்சிக ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு 6 ல் ஆட்சி பலத்துடன் சஞ்சரிப்பது, நன்மை என்றாலும் , உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.


உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும், யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். இருப்பினும் எடுத்த காரியத்தில் திறம்பட செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.


பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் இனிய பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். 3 ல் சனி பலம் பெற்று இருப்பதால் எநத சூழ்நிலையையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.


நீண்ட நாளாக எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். அக்கம் பக்கம் வீட்டார் உதவிக்கரமாக இருப்பார்கள். வீடு, வாகனம் சொத்து வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும்.


குல தெய்வ வழிபாடு நன்மை தரும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். . உடல் ஆரோக்கியம் மேம்படும். சுக், ராகு சேர்க்கை இருப்பதால் கணவன் மனைவிக்குள் மனகசப்புகள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

தம்பதிகள் ஒருவொருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வதால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.தொழில் மற்றும் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். சந்திராஷ்டமம் நாட்கள்:செப்டம்பர் 11,12,13.

பரிகாரம்: ஸ்ரீ குருபகவானை செவ்வாய் கிழமையில் பூஜை செய்து வழிபடுவது நன்மை தரும்.


 


மோகனா  செல்வராஜ்