செட்டிநாடு சுவையில் உருளைக்கிழங்கு காரக்குழம்பு எப்படி செய்வது

அன்பு வாசகர்களே


செட்டிநாடு சுவையில் உருளைக்கிழங்கு காரக்குழம்பு எப்படி செய்வது..



உருளைக்கிழங்கில் புளிக்குழம்பு வைத்தாலே சுவையாக இருக்கும். அதில் காரசார சுவையில் அதுவும் செட்டிநாடு ஸ்டைலில் உருளைக்கிழங்கு காரக்குழம்பு வைத்தால் எப்படி இருக்கும்.


தேவையான பொருட்கள் :


உருளைக்கிழங்கு - 5


தக்காளி - 2


வெங்காயம் - 1


குழம்பு மிளகாய் தூள் - 2 tbsp


புளி தண்ணீர் - 1 கப்


மஞ்சள் பொடி - 1/2 tsp


அரைக்க :


பூண்டு - 8


தேங்காய் - 1 கப்


கசகசா - 1 tbsp


தாளிக்க :


எண்ணெய் - 2 tbsp


கடுகு - 1 tsp


வெந்தையம் - 1 tsp


கடலை பருப்பு - 1 tsp


பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை


கறிவேப்பிலை - சிறிதளவு


செய்முறை :


முதலில் அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பேஸ்டாக அரைத்துக்கொள்ளுங்கள்.


கடாய் வைத்து எண்ணெய் ஊற்றுங்கள். தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேருங்கள்.


அவற்றை 2 நிமிடங்கள் வதக்கியதும் வெங்காயம் சேருங்கள். நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்குங்கள்.


பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும். நறுக்கிய உருளைக் கிழங்குகளை சேர்த்து வதக்குகள்.


பின் புளித்தண்ணீர் சேர்த்து கலந்ததும் தட்டு போட்டு மூடி 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடுங்கள்.


பின் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலந்து அதோடு உப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள்.


பின் மீண்டும் தட்டுபோட்டு மூடி உருளைக்கிழங்கு வேகும் வரை கொதிக்க விடுங்கள்.


குழம்பு கொதித்து பச்சை வாசனை போனதும் கொத்தமல்லி தூவி இறக்கிவிடுங்கள்.


அவ்வளவுதான் செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு காரக்குழம்பு தயார்.


சூப்பரான சுவையில்  உருளைக்கிழங்கு காரக்குழம்பு ரெடி

 

இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் சமையல்  பயணம் தொடரும்.


மற்றும் ஒரு சமையல் குறிப்புடன்.



வணக்கம் அன்புடன் கார்த்திகா