பிரதமருக்கு முதல்வர் கடிதம்:
தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி நிலுவை தொகையை உடனடியாக விடுவிக்கக்கோரி பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
-----------------------------------
நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது:
தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
---------------------------------
புதியதாக 118 ஆம்புலன்ஸ்:
மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உதவும் வகையில், புதியதாக 118 ஆம்புலன்ஸ்களை தலைமை செயலகத்திலிருந்து இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
---------------------------------------
செப்டம்பர் 15ஆம் தேதி வரை ரத்து:
தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று சிறப்பு ரயில் சேவைகளை செப்டம்பர் 15ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
---------------------------------------
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:
வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
----------------------------------------
அட்டவணை படி இயங்கும் சர்வதேச பயணியர் விமான சேவை மீதான தடை வரும் 30ஆம் தேதி வரை தொடரும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-------------------------------------
தமிழக அரசு வெளியீடு:
கோவில்களில் பக்தர்களை அனுமதிப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
-------------------------------------
இலவச போக்குவரத்து வசதி:
மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களில் Nநுநுவு மற்றும் துநுநு தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு இலவச போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தரப்படும் என அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன.