தமிழகத்தில் கடந்த 17 நாட்களில் கொரோனா


தமிழகத்தில் கடந்த 17 நாட்களில் 1,951 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.


தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தநிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,43,945 ஆக அதிகரித்துள்ளது.


அதில் 120 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,886 ஆக அதிகரித்துள்ளது.


இதில் தனியார் மருத்துவமனையில் 36 பேரும், அரசு மருத்துவமனையில் 84 பேர் உயிரிழந்துள்ளனர்.


அந்த வரிசையில், கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 110 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.


இதன்காரணமாக, தமிழகத்தில் கடந்த 17 நாட்களில் 1,951 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 15 நாட்களாக, கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.