தமிழ் ஆவணி மாத ராசிபலன் (1 to 4 )


மேஷம்


மேஷ ராசி அன்பர்களே! உங்கள் ராசி நாதன் செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் பலம் பெற்று சஞ்சரிப்பதால் எதிலும் வெற்றி பெறும் காலம். உங்கள் ஆளுமைத் திறன் வெளிப்படும். கோபத்தைக் குறைத்து நிதானத்துடன் செயல்பட்டால் எதிலும் ஜெயம் உண்டாகும். 


உடல் ஆரோக்கியம் மேம்படும். பேச்சில் அதிக கவனம் தேவை. சுக்கிரன், ராகு சேர்க்கை 3 ல் எதிர்பாலினத்தவரிடம் எச்சரிக்கையுடன் இருங்கள். குடும்ப விஷயங்களை எச்சரிக்கையுடன் கையாளுங்கள்.  தாயுடன் சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஆதாயம் உண்டு. உறவுகளால் பிரச்னை வந்தாலும் புரிந்துணர்வு ஏற்படும்.

குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து அன்புடன் அரவணைத்துச் செல்வது நல்லது. குழந்தைகளின் செயல்பாடுகளால் பெருமை படக்கூடிய சூழல் உண்டாகும்.


குழந்தை பாக்கியத்திற்கு முயற்சிப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். தெய்வ அனுகூலம் உண்டு. வீடு, வாகனப் பழுது உண்டாகி சீர் செய்வீர்கள். எதிரிகளால் குடும்பத்திலும், உறவுகளிலும் சிறு பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதால் பொறுமையுடன் அணுகுவது நல்லது.


கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு.  உத்யோகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் சொல்லுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 25, 26, 27.

பரிகாரம்: சிவபெருமானுக்கு செவ்வாய்க் கிழமையில் பூஜை செய்து வழிபடுவது நன்மை தரும்.
ரிஷபம்


ரிஷபம் ராசி அன்பர்களே உங்கள் ராசி நாதன் சுக்கிர பகவான் மாத முற்பகுதியில் உங்கள் ராசியிலும், மாத பிற்பகுதியில் 2 லும் சஞ்சரிக்கிறார். 


இது உங்கள் திறனையும், ஆளுமையையும் மேம்படுத்தும். பொருளாதார நிலையில் இருந்து  வந்த தடைகள் நீங்கும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை கூடும். இருப்பினும் வாக்கு விரோதம் தவிர்ப்பது நல்லது.


இனிமையாகப் பேசி அனைவரையும் கவருவீர்கள். சொல்லாலும், செயலாலும் மற்றவரை வசீகரப்படுத்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். விலகிச் சென்ற உறவுகள் தேடி வரும்.


வங்கி கடன் கிடைக்கும். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டாகும்.  முயற்சிகள் வெற்றியடையும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.

தாய் வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.  தாய் மற்றும் உறவுகளால் ஆதாயம் உண்டு. வீடு, வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கை கூடும்.


புதுப் பொருள் வந்து சேரும்.  குழந்தைகள் விஷயத்தில் சிறிது கவனமுடன் செயல்படுவது நல்லது.


நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேறும். குல தெய்வ அனுகூலம் உண்டாகும். எதிரிகளால் சிறு, சிறு பிரச்னைகள் வந்து நீங்கும். சுய கட்டுப்பாடு அவசியம். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும்.


செவ்வாய் 12 ல் இருப்பதால் மனைவி வழியில் ஆடம்பர செலவுகள் ஏற்படும். இருப்பினும், எதிர்பாராத தன வரவு உண்டு.  அஷடமத்தில் குரு சஞ்சரிப்பதால் வாகனப் பயணங்களில் கவனம் தேவை.


தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர்வு ஏற்படும். இருப்பினும் உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. முக்கிய ஆவணங்களை கையாளும் போது அதிக கவனம் தேவை.

சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 27,28,29.

பரிகாரம்: ஸ்ரீ விஷ்ணு பகவானை வெள்ளிக் கிழமையில் பூஜை செய்து வழிபடுவது நன்மை தரும்


மிதுனம்


மிதுன ராசி அன்பர்களே! உங்கள் ராசி நாதன் புதன் பகவான் உங்கள் ராசிக்கு 3 ல் சஞ்சரிப்பதால் மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உற்சாகமாக செயலாற்றி எதிலும் வெற்றி பெறுவீர்கள்.


அரசால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலையில் நல்ல மேன்மை உண்டாகும். 


சகோதர, சகோதரிகளால் நன்மை உண்டு. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி உங்களுக்கு கிடைக்கும். தாய் வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். தாய் மற்றும் உறவுகளால் ஆதாயம் உண்டு. 

சுக்கிரன், ராகு சேர்க்கை இருப்பதால் குழந்தைகள் விஷயத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்ளுங்கள். குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து அன்புடன் அரவணைத்துச் செல்வதால் வீண் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.


பூர்வீக சொத்து விஷயங்களில் கவனம் தேவை. ஷேர் மார்க்கெட் விஷயங்களில் நஷ்டம் வர வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள் உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் குறையும்.


தம்பதிகளுக்குள் புரிந்துணர்வு உண்டாகும். வாகன பயணங்களில் கவனம் தேவை. ஏதேனும் உடல் பிரச்சனை என்றால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.


நீண்ட நாள் முயற்சிகள் நிறைவேறும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். செலவினங்கள் இருப்பதால் சிக்கனம் தேவை.

சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 29, 30, 31.

பரிகாரம்: ஸ்ரீ மஹாலட்சுமியை புதன் கிழமையில் பூஜை செய்து வழிபடுவது நன்மை தரும்.


கடகம்


கடக ராசி அன்பர்களே! உங்கள் ராசி நாதன் சந்திர பகவான் உங்கள் ராசியிலே பலம் பெறுவதும், செவ்வாய் திக் பலம் பெறுவதும் நன்மை தரும் அமைப்பு என்பதால் உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். 


எடுத்த காரியத்தில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். முன் கோபத்தை கட்டுபடுத்துங்கள். பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டாலும் மாத பிற்பகுதியில் வீண் விரயங்கள் உண்டு.

உடன் பிறப்புகள் உதவிகரமாக இருந்தாலும் அவர்களால் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வாகனங்களை கவனமாக பயன்படுத்துங்கள். வீடு, வாகன பழுது ஏற்பட்டு சரி செய்வீர்கள். சுக்கிரன், ராகு சேர்க்கை இருப்பதால் தாய் உடல் நிலையில் கவனம் தேவை.


தாய் மற்றும் உறவுகளால் மனஸ்தாபங்களும், விரயமும் ஏற்படும். செவ்வாய் ஆட்சி பலம் பெற்றிருப்பதால் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் குழந்தைகளின் செயல்பாடுகளால் பெருமைப் படக்கூடிய சூழல் உருவாகும்.


தந்தையாரின் உடல் நிலையில் கவனம் தேவை. அவருடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சக ஊழியர்கள் மற்றும் உயரதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.

சந்திராஷ்டம நாட்கள்:செப்டம்பர் 1, 2, 3.

பரிகாரம்: ஸ்ரீ முருகப்பெருமானை திங்கட்கிழமையில் பூஜை செய்து வழிபடுவது நன்மை தரும்.


மோகனா  செல்வராஜ்