சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்


தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேச்சு


தமிழகத்தில் எடுக்கப்படும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார் 


*தமிழகத்தில் எடுக்கப்படும் அதிகப்படியான பரிசோதனைகள் குறித்தும் ஹர்ஷ்வர்தன் பாராட்டினார்: விஜயபாஸ்கர்


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 64 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,829-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 7 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 4,219 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


கேரளாவில் இன்று ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,951 ஆக உயர்ந்துள்ளது. 


உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.62 லட்சத்தை தாண்டியது 


 மகாராஷ்டிராவில் புதிதாக 7,862 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,38,461ஆக அதிகரித்துள்ளது.


டெல்லியில் புதிதாக 2,089 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,09,140 ஆக அதிகரித்துள்ளது


 


கர்நாடகாவில் புதிதாக 2,313 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,418 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் மேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால்,மொத்த இறப்பு எண்ணிக்கை 543 ஆக அதிகரித்துள்ளது.