குறுஞ் செய்திகள் - புதுச்சேரி எம்.எல்.ஏக்கு கொரோனா

 புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு பரிசோதனையில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.


நேற்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் எம்.எல்.ஏ. ஜெயபால் பங்கேற்றதால் சக எம்.எல்.ஏ.க்கள் கலக்கத்தில் உள்ளனர்.நடப்பு ஆண்டில் 2-வது முறையாக வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி முழு கொள்ளலான 15.6 அடியை எட்டியது.கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டு மீன் வாங்க மக்கள் குவிந்துள்ளனர். கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மீன் வாங்க மக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


நாளை முழு ஊரடங்கு என்பதால் வியாபாரிகளும் தனி மனித விலகலை கடைப்பிடிக்காமல் அல்டசியமாக உள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 5 காவலர்களுக்கு கொரோனா உறுதியானதால் காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது.


4 நாட்களுக்கு முன்பு 25 காவலர்களுக்கு பரிசோதனை செய்ததில் 5 காவலர்களுக்கு தொற்று உறுதியானது.ஸ்ரீவில்லிபுத்தூரில் வரும் 26 ஆம் தேதி முதல் ஆக.2 ஆம் தேதி வரை தளர்வுகளின்றி முழு முடக்கம் என துணை ஆட்சியர் அறிவித்துள்ளார்.


ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் 28 கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தளர்வுகளின்றி முழு முடக்கம். பால் விற்பனை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.