சுவையான தக்காளி பிரியாணி

சுவையான தக்காளி பிரியாணி செய்ய...!!தேவையான பொருட்கள்:
 
தக்காளி - 300 கிராம்
பாஸ்மதி அரிசி - இரண்டு கப்
பெ.வெங்காயம் - மூன்று
இஞ்சி பூண்டு விழுது - கால் கப் 
பட்டை - இரண்டு
ஏலக்காய் - இரண்டு
கிராம்பு - மூன்று
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
ப.மிளகாய் - மூன்று
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - அரை கப்
புதினா, கொத்தமல்லி - அரை கப் 
 


செய்முறை: 
 
தக்காளி பிரியாணி. தக்காளி வெங்காயத்தை விழுதாக அரைக்கவும். பாசுமதி அரிசியை கழுவி தண்ணீரில் பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு. ஏலக்காய், புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். அதில் அரைத்து வெங்காய விழுது மற்றும் இஞ்சி பூண்டு  விழுதை சேர்த்து வதக்கவும்.
 
அதில் அரைத்த தக்காளி விழுது மிளகாய் தூள், பச்சை மிளகாய், தக்காளி சாஸ் சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பச்சை வாசனை போய் எண்ணெய் மேலே வந்ததும் இரண்டு கப் அரிசிக்கு மூன்று கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். 
 
அதில்  தண்ணீரை வடித்து அரிசியை சேர்க்கவும். அரிசியை சேர்த்ததும் குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் பத்து நிமிடம் சிறு தீயில் வைத்து பிறகு எடுத்து பரிமாறவும். சுவையான தக்காளி பிரியாணி தயார்.


 

மற்றும் ஒரு சமையல் குறிப்புடன்


வணக்கம் அன்புடன் கார்த்திகா