கீரை விற்கும் பட்டதாரி இளைஞன்!… சாதித்த தமிழனின் கதை

 கீரை விற்கும் பட்டதாரி இளைஞன்!… சாதித்த தமிழனின் கதை


நாம் துரித உணவுகளுக்கும், பாக்கெட் உணவுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க தொடங்கினோமோ அன்றே நாம் ஏராளமான நோய்களை விலைகொடுத்து வாங்கத் தொடங்கினோம் என்று தான் கூறவேண்டும்.


அந்தகாலத்தில்நம் தாத்தா. பாட்டிகள் கூட நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர்.


ஆனால் இன்றோ பள்ளிக்குழந்தைகளைகூட நோய் தாக்குகிறது, காரணம் ஆரோக்கியமில்லாத சாப்பாடு, உடல் உழைப்பு இல்லாமை.


எண்ணற்ற நோய்கள்நம்மை தாக்க இன்று பெரும்பாலானவர்களுக்கு நம் பாராம்பரிய உணவு மீது ஆர்வம் வந்துவிட்டது.


இதன்விளைவாக பலரும்பலவிதமான ஆரோக்கிய உணவுகளின் பக்கம் கவனம் செலுத்தி வருகின்றனர்.


குறிப்பாக பச்சைகாய்கறிகளும், கீரை வகைகளும் நம் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதவை.


இதனை உணர்ந்துஓன்லைனில் கீரை கடையை நடத்தி வருகிறார் பொறியாளரான ஸ்ரீராம்பிரசாத்.


இவரும் ஸ்ரீராம்சுப்பிரமணியம்இணைந்து கோயம்புத்தூரில் தொடங்கிய நிறுவனம் தற்போது சென்னை, மதுரை என பல நகரங்களில்விரிந்து நிற்கிறது.


கடந்தாண்டு120க்கும் மேற்பட்ட கீரை வகைகளை காட்சிப்படுத்தி பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.


நோய்களுக்குத்தீர்வு தரும் ஐயம்பானை, காய்ச்சலுக்கு தீர்வுதரும் நீர்நொச்சி, சளி, இருமலுக்கு கண்டங்கத்திரி,விஷ முறிவுக்கு சிறியாநங்கை, முதுகெலும்புவலுப்பட கோபுரந்தாங்கி,


ஆஸ்துமாவுக்கு எழுத்தாணி பூண்டு, சிறுநீரகப் பிரச்சினைக்குஓர் இதழ் தாமரை, முடி உதிர்வதை தடுக்கும் தொழுகண்ணி, மூளை வளர்ச்சிக்கு தவசி, சிறுநீரககல் பிரச்சினைக்குத் தீர்வுதரும் பூனை மீசை, நீர்முள்ளி என கீரைவகைகளை குறிப்பிடலாம்.


விவசாயிகளின் ஒப்பந்தத்துடன்இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கீரை வகைகளை, மக்களின் தேவைக்குஏற்ப விற்பனை செய்துவருகின்றனர்.


இதுதவிர இவர்களுக்கென்றுசொந்தமாக கீரைப்பண்ணை ஒன்றையும் ஆரம்பித்துள்ளனராம்.


விவசாயிகளின் நலன்மற்றும் மக்களின் ஆரோக்கியத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதாக மனமகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.