திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில்

திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில்திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில் அப்பர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.


இத்தலம் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் திருமணஞ்சேரி எனும் ஊரில் அமைந்துள்ளது.


தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 25வது தலம் ஆகும்


இத்தலத்தின் மூலவர் உத்வாகநாதர். தாயார் கோகிலா. இறைவன் கல்யாண சுந்தரர் வடிவங் கொண்டு கோகிலாம்பிகையை திருமணஞ் செய்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்)


எத்தகைய திருமண தோஷமும் விலக எந்த கோயிலிற்கு செல்லலாம் தெரியுமா

 


“இருமனம் கலப்பது தான் திருமணம்” என்பது ஆன்றோர்களின் வாக்கு. வாழ்வில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் என்பது ஒரு முக்கிய நிகழ்வாகும். ஆனால் சில ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சரியான காலங்களில் திருமணம் நடைபெறாமல் தள்ளிபோய் கொண்டேயிருக்கும்.

அப்படிப்பட்ட மனிதர்களின் குறையை போக்கி, அவர்களுக்கு நல்வாழ்க்கை துணையை அளிக்கும் இறைவன் “திருமணஞ்சேரி ஸ்ரீ கல்யாண சுந்தரமூர்த்தி”. இந்த இறைவனையும் இத்திருத்தலத்தின் சிறப்புகளை பற்றியும் இங்கு அறியலாம்.

 


திருமணஞ்சேரி கோயில் தல வரலாறு :

சோழர்களின் ஆட்சிக்காலத்தில் அந்த வம்சத்தின் பேரரசியான செம்பியன் மாதேவியால் கட்டப்பட்டது இக்கோவில். ஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல்பெற்ற தலம் இது. பூவுலகில் மனித குல பெண்ணாக பிறந்து சிவபெருமானை மணக்க விரும்பிய பார்வதி தேவி,

இந்த தலத்தில் தவம் புரிந்து அந்த சிவபெருமானை மணந்ததாக கூறப்படுகிறது.

 

இந்தத தெய்வீக திருமணத்தை பார்வதிக்கு சகோதரனாக இருந்து மகாவிஷ்ணுவே நடத்தியதாக தல புராணம் கூறுகிறது. இத்தகைய தெய்வீக திருமணம் நடந்த புனிதஸ்தலம் ஆகியதால் இந்த ஊர் “திருமணஞ்சேரி” என அழைக்கப்பட்டது.


 


இக்கோவிலின் சிறப்பாக திருமண தடை, தாமத திருமணம், சரியான வரன் அமையாமை போன்ற காரணங்களினால் திருமணம் தள்ளி போய்க்கொண்டிருக்கும் ஆண்களும், பெண்களும் இக்கோவிலிற்கு வந்து, இக்கோவிலின் இறைவனான ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் மற்றும் பார்வதி தேவிக்கு மாலை சாற்றி வழிபடுகிறார்கள்.

 

இறைவனுக்கு பூஜை முடித்த பின்பு அவருக்கு சாற்றப்பட்ட மாலைகளை இங்கு வேண்டுதலுக்காக வந்திருக்கும் திருமணம் ஆகாத ஆண்களும் பெண்களும் தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு, இக்கோவிலின் பிரகாரத்தை வலம் வந்து வழிபடுகிறார்கள்.

 

இதற்கு பின்பு அந்த மாலைகளை அவர்களின் பூஜை அறையில் பத்திரப்படுத்தி வைத்து, திருமணம் முடிந்த பின்பு அந்த மாலையை தம்பதிகளாக வந்து இக்கோவிலின் இறைவனை வணங்கி இந்த கோவிலிலேயே விட்டுவிடுகிறார்கள்.
கோயில் அமைப்பு


ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கொடி மரம், பலிபீடம், நந்தி காணப்படுகின்றன. கோயிலின் வலப்புறம் விநாயகர் சன்னதி உள்ளது. இடப்புறம் நடராஜர் சன்னதியும் அம்மன் சன்னதியும் உள்ளன. மூலவர் சன்னதிக்கு வலப்புறமாக கல்யாணசுந்தரர் காணப்படுகிறார். மூலவர் சன்னதியின் இடப்புறம் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. 


பெயர்


புராண பெயர்(கள்): மணஞ்சேரி, கீழைத்திருமணஞ்சேரி
அமைவிடம்
ஊர்: திருமணஞ்சேரி
மாவட்டம்: மயிலாடுதுறை
மாநிலம்: தமிழ்நாடு

கோயில் தகவல்கள்
மூலவர்: உத்வாகநாதர், அருள்வள்ளநாதர்
தாயார்: கோகிலா
தல விருட்சம்: கருஊமத்தை
தீர்த்தம்: சப்தசாகரம்
பாடல்
பாடல் வகை: தேவாரம்
பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர்


அமைவிடம் :


கும்பகோணத்திலிருந்து சற்று தொலைவில் திருமணஞ்சேரி என்கிற ஊரில் இந்த கோவில் அமைந்துள்ளது. மயிலாதுறையிலிருந்தும் இந்த ஊரை அடையலாம். கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து அதிகளவு அரசு பேருந்துகள் திருமணஞ்சேரிக்கு இயக்கப்படுகின்றன.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 1-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


நன்றி. 


ஓம் சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்
அன்பே சிவம்...சிவமே அன்பு....


திருச்சிற்றம்பலம்


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்