கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு வர மறுப்பு

 ஆரணியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வர மறுத்ததை அடுத்து போலீசிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.


மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 7 பேரையும் மருத்துவமனைக்கு போலீஸ் அழைத்துச் சென்றதால் பரபரப்பு நிலவியது.


 ஓட்டேரியில் 13-வது மாடியில் இருந்து விழுந்து 15 வயது சிறுமி உயிரிழந்தது. சிறுமி மாடியில் இருந்து தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 1,369 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, 330 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி பொறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று, சுவாசப் பிரச்சனை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளதால் 5 உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.


 பீடி, சிகரெட் போன்ற புகையிலை பொருட்களின் மேல் பயன்படுத்தப்படும் 2 புதிய விழிப்புணர்வு படங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. புகையிலை பயன்பாட்டால் வலிமிகுந்த மரணம் நேரிடும் என அந்த படங்கள் எச்சரிக்கின்றன.