கோவையில் 3 கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
குற்றம்புரிந்தோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வலியுறுத்தினார்.
கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசியதாக கருப்பர் கூட்டத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த திமுக அமைப்பு செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி, கந்த சஷ்டி விவகாரத்தில் முருகரை பழித்துப் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.
கறுப்பர் கூட்டம் விவகாரத்தில் ஏற்கனவே கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுகவில் உள்ளவர்களில் 1 கோடி பேர் இந்துக்கள். கருப்பர் கூட்டம் குறித்து நாளை மறுநாள் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளோம். உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.
திமுக 5 முறை ஆட்சி செய்தபோது ஏராளமான கோயில்கள் சீரமைக்கப்பட்டன. கலைஞர் ஆட்சியில் இந்து கோயில்கள் எல்லாம் பாதுகாக்கப்பட்டன. திருவாரூர் தேரை ஓட வைத்தவர் கலைஞர் கபாலீஸ்வரர் கோயில் குளம் தூர்வாரப்பட்டதும் கலைஞர் ஆட்சியில்தான் என்றார்.
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது.
www.tngasa.in, www.tndceonline.org என்ற தளத்தில் ஜூலை 31 ம் தேதி வரை விண்ணப்ப பதிவு செய்யலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.