மாஸ் நடிகர் சில தகவல்கள்

மாஸ் நடிகர்வசூல் மன்னன் என்றும் அழைக்கப்படுகிறார் விஜய்  பற்றி சில அறியாததகவல்கள் 


பல இளம் இயக்குநர்களும் விஜயை வைத்து ஒரு படமாவது பண்ணிவிட வேண்டும் என்று கனவுடன் சினிமாவில் கால் பதித்து வருகிறார்கள். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான விஜய் ஏராளமான பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்து இன்று மாஸ் நடிகர் என்று சொல்லும் அளவுக்கு ஒரு இடத்தை பிடித்துவிட்டார்.


இந்நிலையில் நடிகர் விஜய் குறித்து பலரும் அறியாத சில தகவல்கள் அண்மைக் காலமாக வெளியாகி வருகின்றன. அதாவது போக்கிரி படத்தின் போது நடிகர் விஜய், சீனியர் நடிகரான நெப்போலியனை அவமானப்படுத்தியதாக கூறப்பட்டது. இதுகுறித்து பேசிய நெப்போலியன் அந்த சம்பவம் நடந்தது உண்மைதான், ஆனால் அதுகுறித்து இப்போது பேச விரும்பவில்லை என மறுத்துவிட்டார்.இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஹரிக்கும் விஜயால் கசப்பான அனுபவம் நேர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இயக்குநர் ஹரி, நடிகர் விஜயை இயக்கலாம் என்ற எண்ணத்தில் வேல் படத்தின் கதையை சொல்ல சென்றிருக்கிறார்.
நிராகரித்த விஜய்


அப்போது முழுக்கதையையும் கேட்ட விஜய், இந்தக் கதை வேண்டாம் என்றுக் கூறி மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அடுத்து ஒரு வாய்ப்பு கொடுப்பார் என்று நினைத்து சிங்கம் படத்தின் கதையை சொல்லியிருக்கிறார் ஹரி.  


இதனால் நொந்துப்போன இயக்குநர் ஒரு முறையல்ல, இரண்டு முறை விஜயால் தான் அவமானப்படுத்தப்பட்டதாக நெருக்கமானவர்களிடம் குமுறியதாக கூறப்படுகிறது. மேலும் கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் இனிமேல் விஜய்க்கு கதை சொல்லப் போவதில்லை என்றும் முடிவு எடுத்துவிட்டாராம்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு மனோபாலாவின் யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்த இயக்குநுர் லிங்குசாமி, சண்டக்கோழி படத்தின் கதையை முதலில் விஜயிடம் தான் சொன்னதாகவும், ஆனால் பாதிக் கதையை மட்டும் கேட்டுவிட்டு அவர் நடிக்க மறுத்து விட்டதாகவும் கூறினார். மேலும் இரண்டாம் பாதி கதையை கேட்ககூட அவர் தயாராக இல்லை என்றும் லிங்குசாமி வேதனை பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.