உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றா விட்டால் கொரோனா வைரஸ் தொற்று மேலும் மோசமடையும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவது முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதை உணர்த்துவதாக கூறினார்.
உலக நாடுகள் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கத் தவறினால் நிலைமை மேலும் மோசமாகும் என்று கூறினார்.
தொடர்ந்து நிலைமை இப்படியே நீடித்தால் பழைய இயல்பான வாழ்க்கை முறைக்குத் திரும்ப முடியாமல் போகலாம் எனவும் டெட்ராஸ் எச்சரித்தார்.