இன்றைய ராசிபலன் 27/07/2020


மேஷம்: பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டு கொண்டிருந்த பொருட்களை வாங்கித் தருவீர்கள். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். நல்லன நடக்கும் நாள்.


ரிஷபம்: மனச்சோர்வு நீங்கி உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த பணவரவு உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை அறிந்து கொள்வீர்கள்.குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


மிதுனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள்.இன்று விருப்பங்கள் கைகூடும்.  மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் மூலம் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். 


கடகம்: பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும்.இன்று எதிர்பாலினத்தாரால் காரிய அனுகூலம் ஏற்படும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.  


சிம்மம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். புதுவாகனம் வாங்குவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.


கன்னி: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். இன்று குடும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் இழுபறியாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். பிள்ளைகளுடன் அநுசரித்து செய்வது கருத்து வேற்றுமை வராமல் இருக்கும். 


துலாம்: வியாபாரத்தில் முன்கோபத்தால் வீண்தகராறு ஏற்பட வாய்ப்புள்ளதால் நிதானமாக செயல்படுவது நல்லது. கலைத் துறையினர் கூடுதல் முயற்சி எடுத்தால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.


விருச்சிகம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து செல்லும். நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசாதீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


தனுசு: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றுவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். சிறப்பான நாள்.
மகரம்: எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் சில புதிய மாற்றங்களை செய்வீர்கள். பகை பாராட்டிய உறவினர்கள் இணைந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளின் ஆலோசனையால் நிலுவைப் பணிகளை முடிப்பீர்கள்.

 

மகரம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். இன்று காரியங்களில் தடை தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும்.  எதிலும் மந்தமான சூழ்நிலையை உருவாக்கும். எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியும். மனகுழப்பம் நீங்கும். வராமல் நின்ற பணம் வந்து சேரும்.

பயணங்கள் சாதகமான பலனை தரும்.

 

மீனம்: அலுவலகத்தில் அதிக வேலை பளுவால் அவதிப்படுவீர்கள். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் சிறு சிறு இழப்புக்கள் ஏற்படக்கூடும். தன்னம்பிக்கையுடன் பொதுநல விஷயத்தில் ஈடுபட்டு பாராட்டைப் பெறுவீர்கள்.

 

 

மோகனா  செல்வராஜ்