பாடகர் திருச்சி லோகநாதன் பிறந்த தினம் இன்று 24.07.2020

 



திருச்சி லோகநாதன் (சூலை 24, 1924 - நவம்பர் 17, 1989) தமிழ்த் திரைப்பட முதல் பின்னணிப் பாடகர். பல திரையிசைப் பாடல்களைப் பாடியவர்


திருச்சி மலைக் கோட்டை மாநகரில் நகைத்தொழில் செய்த சுப்ரமணியன் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் லோகநாதன். இவர் பெயரில் உள்ள T என்ற எழுத்து திருச்சிராப்பள்ளியைக் குறிப்பதாகும்.


நடராஜன் என்பவரிடம் முறையாக இசை பயின்றார். சிறுவயதில் ஜி. ராமநாதன் இசையமைத்த பாடல்களை விருப்பமாகப் பாடுவார்.


இவர் பாடிய முதல் திரைப்பட பாடல்: வாராய் நீ வாராய் எனத் தொடங்கும் பாடல், எம். ஜி. ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்த முதல் படத்தில் ஜி. ராமநாதன் இசையமைப்பில் ஜிக்கியோடு இணைந்து பாடினார்.


லோகநாதன். நடராஜன் என்பவரிடம், முறையாக இசை பயின்றார். 'வாராய் நீ வாராய்...' பாடல் வழியாக, தமிழ் திரையுலகில் நுழைந்தார்.


தமிழ் சினிமாவில் முதன்முதலில், பின்னணி குரல் பயன்படுத்தப்பட்ட படம், ராஜகுமாரி. இதில், லோகநாதன் குரலுக்கு, நம்பியார் வாயசைத்தார்.


இவரது இரண்டாவது பாடல்: மு. கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவான அபிமன்யு (1948) திரைப்படத்தில் இடம்பெற்ற இனி வசந்தமாம் வாழ்விலே என்ற பாடல்.


திருச்சி லோகநாதன் பாடிய பாடல்கள்


    கல்யாண சமையல் சாதம் (மாயா பஜார்)
    ஆசையே அலைபோலே (தை பிறந்தால் வழி பிறக்கும்)
    அடிக்கிற கைதான் அணைக்கும் (வண்ணக்கிளி)
    என்று தணியும் இந்த சுதந்திர தாகம் (கப்பலோட்டிய தமிழன்)
    உலவும் தென்றல் காற்றினிலே (மந்திரி குமாரி)
    புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே (பானை பிடித்தவள்       பாக்கியசாலி)
    வில்லேந்தும் வீரரெல்லாம் (குலேபகாவலி)
    பொன்னான வாழ்வு (டவுன்பஸ்)


குடும்பம்:


லோகநாதன் நகைச்சுவை நடிகை சி. டி. ராஜகாந்தத்தின் மகள் ராஜலெட்சுமி என்பவரை மணம் புரிந்தார்.


இவர்களுக்கு டி. எல். மகராஜன், தீபன் சக்ரவர்த்தி ('பூங்கதவே தாள் திறவாய்' என நிழல்கள் படத்தில் பாடியவர்), தியாகராஜன் என மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.


குறிப்பிட தகுந்த இரண்டு நிகழ்வுகள்


* நகைச்சுவை நடிகர் தங்கவேலு வீட்டு நவராத்திரி கொலுவில் மதுரை சோமு பாடிய பாடலை இரசித்து தான் கையில் வைத்திருந்த வெள்ளி வெற்றிலைப் பெட்டியைப் பரிசளித்தார்


*சம்பள விஷயத்தில் கறார் பேர்வழி, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த தூக்குத் தூக்கி திரைப்படத்தில் இடம்பெற்ற 8 பாடல்களையும் வாய்ப்பு வந்தபோது ஒரு பாடலுக்கு ரூ 500 சம்பளம் கேட்டார், தயாரிப்பாளர்கள் சம்பளத்தைக் குறைக்கச் சொல்ல மதுரையிலிருந்து புதுசா ஒருத்தர் வந்திருக்கார், அவரை பாடச் சொல்லுங்க என்று கூறிவிட்டார்.


திருச்சி லோகநாதன் சுட்டிக்காட்டிய அந்த மதுரைக்காரர்தான் தூக்குத் தூக்கி படத்தில் பாடினார், அவர் டி. எம். செளந்தரராஜன்.


தொகுப்பு  மோகனா  செல்வராஜ்