பிறந்தநாள்-தடை போட்ட நடிகர்


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ம் தேதி கொண்டாடப்படும்.


இதுகுறித்து விஜய் மக்கள் மன்ற சார்ப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போதைய சூழலில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், விஜய்யின் பிறந்தநாளன்று நலத்திட்ட உதவிகள் வழங்குவது, விளம்பரங்கள் செய்வது உள்ளிட்ட எந்தவித செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மிக பிரம்மாண்ட முறையில் பேனர்கள், போஸ்டர்கள் என்றும் ரசிகர்களால் கொண்டாட்டம் களைகட்டும்.


இந்நிலையில், இந்தாண்டு கொரோன பரவல் காரணமாக இந்தாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு தடை போடப்பட்டுள்ளது. 


மேலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உரிய நடைமுறைகளை பின்பற்றி, குடும்பத்தினரை கவனமுடன் பார்த்து கொள்ள வேண்டும் என்றும் நடிகர் விஜய் கேட்டுக் கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.