தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டம் பெருந்துறை
வட்டம், சென்னிமலை யிலிருந்து மேற்கே சுமார் 15 கிமீ தூரத்திலும்,
திருப்பூர் மாவட்டம்,ஊத்துக்குளி யிலிருந்து சுமார் 9 கிமீ தூரத்திலும்,காவிரி ஆற்றில் கலக்கும் நொய்யல் ஆற்றின் வட கரையில், இன்றைய கொடுமணல் அமைந்துள்ளது.
இதன் அமைவிடம், சங்ககாலச் சேர நாட்டின் தலைநகரமான கரூரை, மேற்குக் கடற்கரையுடன் இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக தொல்லியல் துறையின் தலைமை அதிகாரி ரஞ்சித் தலைமையிலான அலுவலர்கள் 5 குழுக்களாகப் பிரிந்து கடந்த 10 நட்களாக கொடுமணலில் அகழாய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வில் பழங்கால ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் பேசிய மொழியின் எழுத்து பொறிக்கப்பட்ட மண் பொருட்கள் கிடைத்துள்ளன.
மேலும், கல்மணி சங்குகள், பளிங்கு கற்கள், இரும்பு பொருட்கள் உள்ளிட்டவைகள் ஆய்வின் மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மிகப் பழமையான முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை தொடர்ந்து கொடுமணலிலும் பண்டைய வரலாறு தேண்டி எடுக்கப்பட்டு வருகிறது.
நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் ஆப்கானிஸ்தானுடன் தமிழர்கள் வணிகம் செய்ததற்கான ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.