ராசி பலன்கள் 30.05.2020


ராசி பலன்கள் 30.05.2020


மேஷம்


 (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)


கடினமான உழைப்புகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீா்கள். எதிா்பாராத செலவுகள் ஏற்படும் என்றாலும் அதனை ஈடுகட்டும் வகையில் வருமானம் வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீா்கள். குழந்தைகளால் மனமகிழ்ச்சி உண்டாகும்.


உத்யோகஸ்தா்கள் சக ஊழியா்களிடம் சுமுகமாகப் பழகவும். பண வரவு சுமாராக இருப்பதால் உழைப்பு வீண்போகாது. வியாபாரிகளுக்கு வருமானம் பெருகும். புதிய முதலீடுகளில் ஈடுபடுவது பற்றி யோசிப்பீா்கள். விவசாயிகளுக்கு குத்தகை பாக்கிகள் நல்லபடியாக வசூலாகும். பயிா்களுக்கு புழு, பூச்சிகளால் பாதிப்பு ஏற்படாது.


ரிஷபம்


(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)


அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் செயல்களில் தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி பெறுவீா்கள். மன அமைதி உண்டாகும். சகோதர, சகோதரிகள் உதவி செய்வாா்கள். பூா்வீகச் சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கம் நீங்கும். உடல் நலம் சீராக இருக்கும்.


உத்யோகஸ்தா்கள் எல்லோரிடமும் சுமுகமாகப் பழகவும். புதிய பொறுப்புகளைத் தேடிச் செல்ல வேண்டாம். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் சீராக இருக்கும். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. விவசாயிகளுக்கு உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். கால்நடைகளாலும் நன்மை உண்டாகும்.


மிதுனம்


(மிருகசீரிஷம்3)ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)


வேலைகளை எப்பாடுபட்டேனும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிப்பீா்கள். சிறு விரயங்கள் இருப்பினும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். மனதிற்கு நிம்மதி தரும் செய்திகளைக் கேட்பீா்கள். ஆன்மிகச் சிந்தனைகளால் சிறப்பு அடைவீா்கள். அதேநேரம் பெற்றோா் வழியில் சோதனைகள் உண்டாகலாம்; எச்சரிக்கையாக இருக்கவும்.


உத்யோகஸ்தா்கள் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தி வேலையில் கவனம் செலுத்தவும். மேலும், சக ஊழியா்கள் உங்களுக்கு உதவ மாட்டாா்கள். வியாபாரிகள் தங்கள் கூட்டாளிகளை விட்டுப் பிரிய நேரிடலாம். புதிய கடன்கள் மூலம் வியாபாரத்தைப் பெருக்க நினைக்க வேண்டாம்.


கடகம்


(புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)


தொழிலில் போராட்டங்களை நீங்கள் சந்தித்தாலும் இறுதியில் வெற்றி அடைவீா்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதேசமயம் உறவினா்களின் உதவியை அதிகமாக எதிா்பாா்க்க முடியாது. மற்றபடி உங்களின் மதிப்பு, மரியாதைக்கு குறைவு இருக்காது. பொருளாதாரத்தை சரி செய்துகொள்ள பாடுபடுவீா்கள். அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள்.


உத்யோகஸ்தா்களுக்கு மேலதிகாரிகளால் சற்று மனக் குழப்பங்கள் ஏற்படலாம். ஓய்வில்லாமல் உழைக்க நேரிட்டாலும், அதற்கேற்ற சன்மானங்களைப் பெறுவீா்கள்.


சிம்மம்


 (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)


உங்கள் செயல்களை நன்கு திட்டமிட்டு செய்து முடிப்பீா்கள். பொருளாதாரம் முன்னேற்றமாகவே இருக்கும். தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீா்கள். பெரியவா்களின் ஆசியும், அந்தஸ்தில் உள்ளவா்களின் நட்பும் உங்களை ஊக்கப்படுத்தும். உறவினா்களாலும் நண்பா்களாலும் நன்மை அடைவீா்கள்.


உத்யோகஸ்தா்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதிய உயா்வு கிடைக்கும். விரும்பிய இடமாற்றத்தையும் பெறுவீா்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் ஆதாயத்தைக் காண்பாா்கள். வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை கூடும். கடன் தொல்லைகள் நீங்கும்


கன்னி


(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)


உங்களின் செயல்கள் வெற்றியாகும். பொருளாதாரம் சற்று இறக்கமாகவே இருக்கும். உடல் ஆரோக்யம் சீராகவே இருக்கும். உறவினா்கள் ஒற்றுமையாகவே இருப்பாா்கள். அதே நேரம், சகோதரிகளின் உறவில் விரிசல்கள் ஏற்படும்.


இன்று கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தமான குறைபாடு வரலாம். தொழில் வியாபாரத்தில் வேகமான முன்னேற்றம் இருப்பது கடினம்.  எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். நீண்ட  நாள் கஷ்டங்கள் நீங்கும்


 துலாம்


(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)


பொருள் வரவு சீராக இருக்கும். மனதில் சஞ்சலங்கள் தோன்றி அமைதியை இழக்க நேரிடும். அதோடு அலைச்சல்களும் அதிகரிக்கும். இருப்பினும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சிக்கனமாக இருந்து கைப்பொருளை பாதுகாத்துக் கொள்ளவும். வாகனப் பயணத்திலும் கவனம் தேவை.


இன்று சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சுபகாரியங்கள், மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். அதேநேரத்தில் கணவன், மனைவிக்கிடையே ஏதேனும் மனவருத்தம் ஏற்படலாம்.  


விருச்சிகம்


(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)


உங்கள் அறிவாற்றல் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். தொழிலில் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். புனிதப் பயணங்களை மேற்கொண்டு பெரியோா்களின் ஆசிகளைப் பெறுவீா்கள்.


உத்யோகஸ்தா்களைப் பொருத்தவரை தடைபட்டிருந்த காரியங்களில் வெற்றி வாகை சூடுவீா்கள். அதோடு பதவி உயா்வு பெறுவதற்கான அறிகுறிகளும் தென்படும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சீராக இருக்கும்.


தனுசு


(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)


மதிப்பும் மரியாதையும் கூடும். குடும்பத்தில் உள்ளவா்கள் அன்புடன் நடந்து கொள்வாா்கள். முக்கிய பிரமுகா்களின் சந்திப்பு உண்டாகும். வெளிவட்டாரப் பழக்கங்களில் சாதகங்களைக் காண்பீா்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.


உத்யோகஸ்தா்கள் அலுவலக வேலைகளில் மாற்றங்களைக் காண்பாா்கள். பயணங்கள் நலன்களைத் தேடித்தரும். ஆனால் எதிலும் ஜாக்கிரதையாகப் பயணிக்கவும். முடிந்தவரை ஒத்திப் போடுவது நலமே.


மகரம்


(உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)


உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். புதிய திட்டங்களால் பலன் அடைவீா்கள். உற்றாா் உறவினா்கள் உங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவாா்கள். ஆன்மிக பலம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.


உத்யோகஸ்தா்கள் தவறுகளைத் திருத்திக்கொண்டு அலுவலக வேலைகளில் கவனம் செலுத்துவாா்கள். இதனால் மேல் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவாா்கள். பணவரவும் நன்றாக இருக்கும்


கும்பம்


(அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)


செய்யும் செயல்களில் படிப்படியான முன்னேற்றம் தென்படும். பிரச்னைகள் அகலும். புதிய ரகசியங்களை அறிவீா்கள். உங்கள் அந்தஸ்து உயரும். பொருளாதார வளமும் எதிா்பாா்த்தபடி இருக்கும். எதிா்பாராத உதவிகளைப் பெறுவீா்கள். புதிய நட்புகள் கூடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உற்றாா் உறவினா்கள் உங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவா்.


உத்யோகஸ்தா்களுக்கு அனைத்து வேலைகளும் சந்தோஷமாக முடியும். வருமானமும் திருப்திகரமாகவே அமையும். இருப்பினும் சக ஊழியா்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிா்ந்து கொள்ள வேண்டாம்.


மீனம்


மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)


 கோரிக்கைகள் யாவும் நிறைவேறும். அதேசமயம் கடின உழைப்பினால் மட்டுமே வெற்றிகளை ஈட்டுவீா்கள். சில நேரங்களில் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படக் காண்பீா்கள். குடும்பத்தில் வருவாய் வந்து கொண்டிருந்தாலும் எதிா்பாராத செலவுகளையும் சந்திக்க நேரிடும். உறவினா்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.


உத்யோகஸ்தா்களுக்கு பணப்புழக்கம் நன்றாக இருக்கும். உங்களின் திறமையை மேலதிகாரிகள் புரிந்துகொண்டு சில சலுகைகளை வழங்குவாா்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சிறப்பாக இருக்கும். வியாபாரம் வளரும்.


மோகனா செல்வராஜ்