டிஜிபி, காவல் ஆணையருக்கு ஐகோர்ட் ஆணை

 


    பெண் காவல் ஆய்வாளர், எஸ்.ஐ.க்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை புகாரை விரைந்து பரிசீலிக்க ஐகோர்ட் ஆணை*

*சென்னை : பெண் காவல் ஆய்வாளர், எஸ்.ஐ.க்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை புகாரை விரைந்து பரிசீலிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.*

*ஐகோர்ட் பெயரை தவறாக பயன்படுத்தியதாக ஆய்வாளர் அம்பிகா, எஸ்.ஐ. ராஜேஸ்வரி மீது புகார் கூறப்படுகிறது.*

*பாலசெந்தில் முருகன் அளித்த மனுவை பரிசீலிக்க டிஜிபி, காவல் ஆணையருக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது*

  🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆

நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டால் இனி குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை – தமிழ்நாடு அரசு*

நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டால் இனி குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மோசடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து நிவாரணம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதி நிறுவன மோசடி, புகார்களை விரைந்து முடிக்க தனி அதிகாரி நியமனம் செய்யப்படுவர் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.



மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மருத்துவ உதவி பணி தொழிலாளர்களை கட்டாயமாக தொடர் பணிச்சுமை கொடுப்பதாக கோரி தமிழ்நாடு அரசு மருத்துவமனை உதவி பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பணியாளர்கள் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு*