சபரிமலையில் நவக்கிரக கோவில் பிரதிஷ்டை: நடை திறப்பு

 


    *சபரிமலையில் நவக்கிரக கோவில் நாளை மறுநாள் பிரதிஷ்டை: இன்று மாலை நடை திறப்பு.*

*ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.*

*17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் ஆடி மாத சிறப்பு பூஜைகள் நடைபெறும்.*

🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀

*நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்*

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரியதை அடித்து ரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து நீதிமன்றம் ரத்து செய்தது. சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதால் மாநகராட்சி ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈

*இணைய வேகத்தில் புதிய சாதனை!*

இணைய வேகத்தில் புதிய உலக சாதனை படைத்துள்ளது ஜப்பான்.

 விநாடிக்கு 1.02 பெட்டாபிட் இணைய வேகத்தை கண்டுபிடித்து சாதனை.

இது இந்தியாவின் சராசரியை விட 1.6 கோடி மடங்கு அதிவேகம்.

இதன்மூலம் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உள்ள திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என அனைத்தையும் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈

*சீனாவின் திருட்டு புத்தி!*

1) ரஃபால் விமான ரகசியங்களைத் திருட, கிரீஸ் நாட்டில் முயற்சி. நான்கு சீன உளவாளிகள் கைது.

2) யுக்ரைனில் நெப்டியூன் ஏவுகணை விவரங்களைத் திருட முயன்று கைதான சீன உளவாளி!

ரஷ்யாவிலிருந்து எஸ்-300 வான்வெளி பாதுகாப்பு அமைப்பை வாங்கி, காப்பியடித்து, 'புதிய' வான்வெளி அமைப்பை உருவாக்கி பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு விற்றது. சீனா தயாரித்த வான்வெளி பாதுகாப்பு அமைப்பின் லட்சணம் ஆப்பரேஷன் சிந்தூரில் வெளியானது.

ஆப் சிந்தூரில் திறம்பட செயலாற்றிய எஸ்400ஐ வாங்க ரஷ்யாவை அணுகியிருக்கிறது சீனா. எஸ்500ஐ பாரதத்துக்கு கொடுக்க அனுமதி கொடுத்த புட்டின், அதே எஸ்500ஐ சீனாவுக்குக் கொடுக்க மறுத்து விட்டார்.

🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆

*குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்*

*🎡பகட்டுச் சம்பிரதாயங்களைத் தவிர்த்து மனிதநேயம் போற்றிய சமத்துவச் சிந்தனையாளர். குன்றக்குடி அடிகளாரின் புகழ் வாழ்க.*

* சோவியத் யூனியன் பயணத்தின் உந்துதலால், பிரதமர் இந்திரா காந்தி அவர்களே பாராட்டிய ‘குன்றக்குடிக் கிராமத் திட்டம்’ கொண்டுவந்த பொதுவுடைமைச் சிந்தனையாளர்"*

- *முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!*

*▪️. “தமிழில் அருச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர். சமூகநீதித் தளத்தில், பெரியார், அண்ணா, கலைஞர் எனத் திராவிட இயக்கத்துக்குத் துணையாக நின்ற மாண்பாளர் குன்றக்குடி அடிகளார்.*

*பகட்டுச் சம்பிரதாயங்களைத் தவிர்த்து மனிதநேயம் போற்றிய சமத்துவச் சிந்தனையாளர்"

🎆🎇🎆🎆🎇🎇🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆


    *ஜூலை 27, 28-களில் பிரதமர் மோடி தமிழகம் வருகை.*

வரும் ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு பிரதமர் மோடி வருகை.

அரியலூர், கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை நிகழ்வில் பிரதமர் பங்கேற்க உள்ளதாக தகவல்.

வருகிற 26ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர்.

🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆

பயங்கரவாதிகள் கைது - டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

"நீண்ட காலமாக தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க ஆபரேஷன் நடைபெற்றது

கோவை போலீசார், ஆந்திர போலீசார், தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு போலீசார் 3 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்

30 ஆண்டு காலமாக தலைமறைவாக இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

அபுபக்கர் சித்திக் மீது தமிழ்நாட்டில் 5 வழக்குகள் - கேரளாவில் 2 வழக்குகள் உள்ளன

ஆபரேஷன் அறம் மூலம் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்

பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜா 1998 கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்புடையவர்.

பயங்கரவாத எதிர்ப்புப் படையில் 181 அதிகாரிகள் உள்ளனர்

2012 வரை அபுபக்கர் சித்திக் தொடர்ந்து குற்றங்களை செய்து வந்தார்

போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள உள்ளோம்"

🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆