கடையநல்லூரில் விபத்தில் பலியான கூலித்தொழிலாளி உடல் அரசு மரியாதை உடன் அடக்கம்
கடையநல்லூர் முப்புடாதி அம்மன் கோவில் தெற்கு தெருவில் குடியிருக்கும் ராமர் மகன் கல்யாண சுந்தரம் வயது 47 திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.
கடந்த 23ம் தேதி இரவு கல்யாணசுந்தரம் மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலை அட்டைகுளம் அருகே நடந்து சென்ற போது, பின்னால் வந்த ஆட்டோ கல்யாணசுந்தரத்தின் மீது மோதி தூக்கி வீசியது.
இதில் கல்யாணசுந்தரம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார் உடனே அருகில் உள்ளவர்கள் கல்யாண சுந்தரத்தை மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடனே அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க, குடும்பத்தினர் முன்வந்தனர்.
இதன்படி, கல்யாணசுந்தரத்தின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
கடையநல்லூருக்கு கொண்டு வந்த அவரின் உடலுக்கு அரசு சார்பில் தென்காசி ஆர்.டி.ஓ., லாவண்யா மலர் வளையம் வைத்து தொழிலாளியின் உடல் அரசு மரியாதையுடன் . அடக்கம் செய்யப்பட்டது அப்பொழுது கடையநல்லூர் தாசில்தார் சுடலைமணி கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்
விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற ஆட்டோவை அருகில் உள்ள சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடித்து மேலக்கடையை நல்லூரைச் சேர்ந்தஆட்டோ டிரைவர் சங்கர் (40) என்பது தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து அவரை பிடித்து கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று இளைஞர்கள் அதிக அளவில் ஆட்டோ ஓட்டி வருகின்றனர் சிலர் ஆட்டோக்களை தாறுமாறாக ஓட்டி விபத்தினை ஏற்படுத்தி பல உயிர்கள் பலியாவதற்கு காரணமாகின்றனர். ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு கட்டுப்பாட்டையும் விதித்து தண்டனைகள் விரைவில் வழங்குமாறு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.
🌏...உண்மை செய்திகள்...🌏