11.03.2024 உலக மகளிர் தின விழாவிற்கான ஏற்பாடுகளை அனைவரும் பார்த்துப் பார்த்துச் செய்திருந்தாலும், அது வந்து சேரலையா இன்னும்’, ‘ஷீல்டுல்லாம் ரெடியாய்டுச்சாப்பா?’ ‘பேனர் கட்டியாச்சா?’ போன்ற கடைசி நிமிட டென்ஷன்கள் ஓடிக் கொண்டுதான் இருந்தன.
காலையில் 10 மணிக்கு விழா துவங்கும் என்று போட்டிருந்தோம்.
காலை 10 மணி முதலே நண்பர்கள் வரத் துவங்கி விட்டனர்,
இரு மருத்துவ அறிஞர்களும் அவைக்கு முதல் ஆளாக வந்து மகிழ்வைத் தந்தார்கள்.
ரசனைக்கு விருந்தாய் அனைத்து நண்பர்களை யும் பார்த்துப் பேசியதில் அளவிட இயலாத மகிழ்ச்சி எனக்கு.
வலையில் நான் எழுதுவதை தவிர, வலைப்பதிவுகளில் எழுதாமலேயே படித்து போன் மற்றும் வாட்ஸாப்ப் மூலம் உற்சாகப்படுத்தும்
நண்பர்கள் நிறைய உண்டு.
அனைவருக்கும். அவர்களின் பிரதிநிதி நான் என்பது போல காலை 9.30 மணிக்கு அரங்கிற்கு வந்து உற்சாகமாய் விழாவில் கலந்து கொண்டா ர்கள்
பிரமிப்பு, மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகள் அளவு கடந்து போய்விட்டால் வாயில் பேசுவதற்கு வார்த்தைகள் வராது. என்ன சொல்வது என்றே தெரியாமல் திகைத்துத் தடுமாறி நிற்கும் நிலை ஏற்படும். அப்படித்தான்...
11.03.2024 நடந்த உலக மகளிர் தின விழா பற்றி சுருக்கமாக சில வார்த்தைகள் எழுதலாம் என்று நினைத்து ஆரம்பித்தால் மகிழ்வின் உச்சத்தில் வார்த்தைகள் மனதுக்கு வசப்படாமல் விளையாட்டு காட்டுகின்றன. ஏனெனில் மகிழ்ச்சி என்கிற சொல்லை அதன் முப்பரிமாணத்தில் அனுபவிக்கிற வாய்ப்பு இன்றைய நாளில் கிடைத்தது.
எனது தோழிகளும் உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கி
கொண்டிருக்கிறார்கள் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி மனதில் நிரம்பியிருக்க, சிறப்பு அழைப்பாளருடன் அரங்கிற்குத் திரும்பினேன்.
மேடையேற்றி அவர்களை கெளரவித்தது விழாக் குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது.
சிறப்பு அழைப்பாளர்
திரு நடேஷ் மூர்த்தி அவர்கள் பேசும்போது பெண்கள் அனைவரும் ஆண்டவர்கள் என்று குறிப்பிட்டார்.
இந்த விஷயத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டினார்.
சிறப்பு அழைப்பாளர் மருத்துவர்கள் இருவரையும் முதலில் விழாவுக்கு வரும்படி அவரை நான் அழைத்த போதே,
அங்க நான் வந்து எதைப் பத்திப் பேசறது?’’ என்று கேட்டிருந்தார்.
நான், மன நலம் மற்றும் உடல் நலம்
பற்றிய கருத்துக்களை பற்றி பேசுங்கள் என்றேன்.
அதன் பின்னர் இருவரும் தங்கள் கருத்துக்களை தெளிவாகவும், எளிய நடையில் எடுத்து
உரைத் தார்கள்.
எங்களில் நிறைய உறுப்பினர்கள் பெண்களின் சக்தியைப் பற்றியும், ப்ளஸ் மற்றும் மைனஸ் ஆகிய அனைத்தையும் அலசி பேசினார்கள்.
நான் எ ன் உரையின் மூலம்
உணர்த்தினேன்
பெண்கள் பற்றிய
என் கருத்தை பதிவு செய்தேன்.
மருத்துவர் ஆனந்த பிரதாப், நிலைய மருத்துவர் ஓய்வு
அனைவருக்கும் பிரமிப்பை அள்ளித் தந்து, அரங்கின் பலத்த கரகோஷத்தைப் பெற்றுக் கொண்டார்.
நன்றியுரைத்து விழா நிகழ்வு நிறைவுற்றதும் சிறப்பு விருந்தினரை வழியனுப்பி வைத்துவிட்டு , கிளம்ப வேண்டிய அவசர(சிய)த்தி
லிருந்த நட்புகள் விடைபெற்றுச் சென்றுவிட மற்றவர்கள் நிறைய நேரம் மனம்விட்டுப் பேசிவிட்டுப் பிரிந்தோம்.
இப்படி அனைவரையம் சந்தித்து, கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதிலும், திருமதி. மருத்துவர் ஜி. உஷா,என்னை அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே மற்றும் தோழியாக அங்கீகரித்து அன்பைப் பொழிந்ததிலும் மகிழ்ச்சி நிரம்பியிருந்த மனது அன்று நடந்த ஒவவொரு நிகழ்வையும் ரீவைண்ட் பண்ணி சந்தோஷித்தபடி இருந்ததால் எனக்கு விழிகளை கண்ணீர் நிரம்ப நான் என்னை கட்டு படுத்த வெகுநேரமானது!
இது நாமே நடத்துகிற, நமக்கான விழா என்று மகிழ்வுடன் உணர்வுரீதியாக ஒன்றிணைந்து விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நெகிழ்வுடன், மனமகிழ்வுடன் என் நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
நன்றி
மோகனா செல்வராஜ்
சென்னை மாவட்ட மகளிர் அணி செயலாளர்