டிக்கெட் பரிசோதகராக திருநங்கை

 


       தெற்கு ரயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர்

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக சிந்து என்ற திருநங்கை  பதவியேற்றுள்ளார்.

இதன் மூலம் தெற்கு ரயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.முன்னதாக ரயில்வேயின் திண்டுக்கல் மின்சார பிரிவில் பணியாற்றிய இவர், விபத்து ஒன்றில் சிக்கினார். இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் பயிற்சியை முடித்த இவர் தற்போது டிக்கெட் பரிசோதகராக பணியில் இணைந்துள்ளார்.