வலுத்தூக்கும் போட்டியில் இந்திய அளவில் சாதனை படைத்த ராயபுரத்து மாவீரர்
சென்னை: ராயபுரத்தைச் சேர்ந்த தர்மராஜ் அவர்களின் மகன் D.லக்ஷ்மணன் இந்திய அளவில் ஆசியா மற்றும் உலக அளவில் வலுத்தூக்குதல் போட்டியில் பல தங்கப்பதக்கங்களை வென்றவர்
பவர்லிஃப்டிங் இந்தியா
சர்வதேச பவர்லிஃப்டிங் கூட்டமைப்புடன் இணைக்கப்பட்ட, ஆசிய பவர்லிஃப்டிங் கூட்டமைப்புடன்
இணைந்தது: காமன்வெல்த் பவர்லிஃப்டிங் கூட்டமைப்பு மூலம் நடைபெற்ற போட்டி,யில்
நேஷனல் சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் & மாஸ்டர்ஸ் (ஆண்கள் & பெண்கள்) கிளாசிக் & எக்யூப்டு பெஞ்ச் பிரஸ் 28வது சாம்பியன்ஷிப் போட்டி 22-26 நவம்பர் 2023 அன்று பெங்களூரு, கர்நாடகாவில் இந்திய அளவில் வீரர்கள் கலந்து கொண்டு நடைபெற்ற வலுத்தூக்குதல் (benchpress) போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த D. லட்சுமணன்(65)வயது 59,கி.கி மாஸ்டர் 111 பிரிவில் 97கிலோ எடை வலுத்தூக்கி முதல் பரிசு தங்கம் வென்றார். வெள்ளி, வெண்கலம் பதக்கங்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்த வீரர்கள் தட்டி சென்றனர். இந்திய அளவில் சுமார் 1800 பேர் கலந்து கொண்டனர் தமிழ்நாட்டின் சார்பில் 108 பேர் இப்போட்டியில் கலந்து கொண்டார்கள்,ஆண்கள் பெண்கள் என இருவருக்கும் வலுத்தூக்குதல் போட்டி நடைபெற்றது,
புதிய இந்திய சாதனை
கிளாசிக் வகுப்பு :
59கிலோ பிரிவில் மாஸ்டர்111 எடை வலுத்தூக்கும் போட்டியில் 91.0கி.கி எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். இது புதிய இந்திய சாதனையாகும், இந்தியாவின் வலிமை வீரர் என்ற பட்டத்தையும் பெற்றார். வெள்ளி மற்றும் வெண்கலம் பதக்கங்களை மேற்கு வங்காளத்தை சேர்ந்த வீரர்கள் பெற்றனர். இவருடன் சென்ற தமிழ்நாட்டு பயிற்சியாளர் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். D. லட்சுமணன் வலுத்தூக்கும் போட்டியில் அதிகம் தங்கப்பதக்கங்களை வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தார்.
சென்னை ராயபுரத்தில் உள்ள இரகுவீர் உடற்பயிற்சி மன்றத்தில் 52 ஆண்டுகளாக பயிற்சி பெற்று இந்த சாதனையை படைத்தார்.
விரைவில் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் உலக வலுத்தூக்குதல் போட்டியில் D. லட்சுமணன் தகுதி பெற்றுள்ளார். இது தமிழகத்துக்கும் வடசென்னை, ராயபுரத்தில் உள்ள மக்களுக்கும் பெருமையாகும்.
தமிழ்நாட்டின் சார்பில் இந்தியாவின் சிறந்த வலுத்தூக்கும் போட்டி மாவீரர் தங்க மகன் D.லட்சுமணன் அவர்களை தமிழக அரசு, தமிழக விளையாட்டுத்துறை சார்பில் அவரை ஊக்குவிப்பதற்காக பாராட்டு விழா வைக்க வேண்டும் என்று அப்பகுதி வாழும் சமூக ஆர்வலர்கள் பத்திரிகையாளர்கள் நண்பர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
வாழ்க்கை குறிப்பு:
.
தங்க மகனின் வாழ்க்கை குறிப்பு சென்னை ராயபுரத்தில் பென்னி பேக்கரி என்ற நிறுவனத்தை அவருடைய அண்ணன் பென்னி D.காமராஜ் அவருடன் இணைந்து நடத்தி வருகின்றார் பென்னி காமராஜர் அவர்களும் சமூக நலனின் அக்கறை உள்ளவர். ராயபுரம் பகுதியில் அவர் இல்லத்தில் வசித்து வரும் D.லட்சுமணன் மிகுந்த ஆன்மீக பக்தி உடையவர் குமாரசாமி தெருவில் உள்ள அருள்மிகு வட பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் மூன்று முறை கும்பாபிஷேகம் செய்து அக்கோவிலை பிரம்மாண்ட வடிவில் உருவாக்கினார் இந்த நற்செயலுக்கு பகுதியில் உள்ள பலரும் உறுதுணையாக இருந்தனர். D. லட்சுமணன் அவருக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கௌரவித்து இக்கோவிலில் அவருக்கு ஒரு நிர்வாகப் பணியை வழங்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள ஆன்மீகவாதிகள் பொதுமக்கள் விரும்புகின்றனர்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐
P.தர்மலிங்கம்
🌏...உண்மை செய்திகள்...🌏